விழுப்புரம் : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி டோல் பூத்தில் முட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியதில் பணியிலிருந்த ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


விக்கிரவாண்டி சுங்கச்சாவடி


சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சுங்கச்சாவடியில் வாகனங்களில் இருந்து சுங்கவரி வசூலிக்க சராசரியாக எட்டு நிமிடங்கள் ஆகும். இதைக் கருத்தில்கொண்டு, 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் fastag தொடங்கப்பட்டது.


நாடு முழுவதும் உள்ள வாகனங்களில் fastag பொருத்தப்பட்ட பிறகு, எந்த கட்டணத்திலும் வரி வசூலிக்க 47 வினாடிகள் மட்டுமே ஆகும். இன்னும் சில சுங்கச்சாவடிகளில், அதற்கு அதிக நேரம் எடுக்கும். இதற்கு முக்கிய காரணம், ஒரு வாகனத்தில் fastag இல்லாவிட்டால் அல்லது அதில் இருப்பு குறைவாக இருந்தால், இரட்டை வரி பணமாக வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு வாகனத்திலிருந்து கட்டணம் வசூலிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் மற்ற வாகனங்கள் தாமதமாகின்றன. மேலும் இருந்தாலும் கூட ஸ்கேன் செய்வதில் தாமதம் ஆவதால் சுங்கசாவடி பணியாளர்கள் கையில் உள்ள ஸ்கானிங் கருவி மூலம் பதிவு செய்து அனுப்பி வருகின்றனர்.


விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விபத்து - ஒருவர் பலி


இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வார இறுதி நாள் என்பதால் அதிக அளவிலான வாகனகள் வரத்தொடங்கியது. நேற்று இரவு கணேசன் பணியிலிருந்த போது சென்னையிலிருந்து - திருச்சி நோக்கி முட்டை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க  பிரேக் அடித்துள்ளார். அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியானது சுங்கச்சாவடி டோல் பூத் மற்றும் அதன் அருகே பணியிலிருந்த கனேசன் மற்றும் மணிகண்டன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கனேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்த மணிகண்டன் காயங்களுடன் உயிர் தப்பினார்.


போலீசார் விசாரணை


விபத்து குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டதின் பேரில் விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் இறந்த கணேசனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு  வருகின்றனர். சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் டோல் பூத்தில் உட்கார வைக்காமல் வெளியில் நிற்க வைப்பதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.