பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு விமான டிக்கெட் உடன் இரண்டு நாள் சுற்றுலா செல்வதற்கான செலவையும் ஏற்று பள்ளி நிர்வாகத்தின் செயல் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி சத்ரிய நாடார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது பழமை வாய்ந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற திருமங்கலம் அருகில் உள்ள கண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் வீரலட்சுமி தம்பதியினரின் மகள் ரஞ்சனி அரசு பொது தேர்வில் 477 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
ரஞ்சனி, தற்போது பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி ரஞ்சனிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாராட்டு விழாவில் ரஞ்சனியின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவியை உற்சாகப்படுத்தும் விதமாக மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட மூன்று பேருக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து அங்கிருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்
விமான டிக்கெட் மட்டுமின்றி இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி சுற்றி பார்ப்பதற்கான செலவு உட்பட அனைத்து செலவுகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது
இதனை மற்ற மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக பள்ளி செயலாளர் இளங்கோ பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி பள்ளித் தலைவர் தமிழ்ச்செல்வன் என அனைவரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து விமான டிக்கெட்டை வழங்கினர். இதைதொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.