தமிழக அமைச்சர்கள் ஆய்வு

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், 34 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுக்காக வந்திருந்தார். அப்போது அமைச்சர் ரமேஷ் மட்டும் முக்கவசம் அணிந்து பக்தர்களோடு பக்தர்களாக சென்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார்.இதற்கு அர்ச்சகர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என 4 பேருக்கு 4000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அர்ச்சகரின் மொபைல் எண்ணிற்கு  Gpay மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

Continues below advertisement

கோயிலில் அமைச்சர் ரமேஷ் ரகசிய ஆய்வு

இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் புகார் செய்ததையடுத்து இந்த சம்பவம் தெரிவந்தது. இதனையடுத்து அமைச்சரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் கோயிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்று ( 29.06.2026)  திருக்கோயில் வளாகத்தில் ஆய்வு செய்ததில் இந்திருக்கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களிடம் அர்ச்சனை கைங்கரியம் செய்து வரும் ஐயப்பன் என்பவர் தரிசனத்திற்கு முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்ததாக கூறியுள்ளார். 

இதனையடுத்து ஜயப்பன் ஐயர் என்பவரை  அமைச்சர் விசாரணை செய்ததில் ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அன்னார் மீது தக்க நடவடிக்கை எடுக்க  உள்துறை கண்காணிப்பாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 29.05.2025 தேதிய கடிதத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர்

எனவே இத்திருக்கோயில் நலன் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இதற்கு மேல் கைங்கர்யம் செய்திடும் பட்சத்தில், தங்களது செயல்பாடுகள் ஏற்க கூடியதாக இருக்காது என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டியதாக உள்ளது. எனவே திருச்செந்தூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சட்டப்பிரிவு கீழ்இவ்வுத்தரவு தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இத்திருக்கோயில் பூஜை கைகரிய செய்வதற்கு நடை செய்து உத்தரவிடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல திருச்செந்தூர் கோயிலில் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடியிறக்கும் பணியாளர்கள் சிலர் முறைகேடாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்வதாக செய்தி வெளியானது. இதனையடுத்து வீடியோ தரவுகளை ஆய்வு செய்ததில் அவ்வாறு கையூட்டாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்த முடி இருக்கும் பணியாளர்கள்சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகிய இரண்டு முடி இறக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காணிக்கை பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

அர்ச்சகர், காவலாளி சஸ்பெண்ட்

அதன் படி கட்டணமில்லை முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் கையூட்டு பெற்று திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய முயயிறக்கும் பணியாளர்கள் சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகியோரின் மீது எடுக்கப்பட வேண்டிய ஒழங்கு நடவடிக்கை தொடர்பாக  மேற்படி பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. மேற்படி முடியிறக்கும் பணியாளர்கள் தற்கால பணி நீக்கம் செய்யப்படும் காலத்திற்கு உரிய முடி காணிக்கை பங்குத் தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகியன மாதாந்திர பட்டியலில் நிறுத்தம் செய்து பட்டியலை சமர்ப்பிக்க முடிகாணிக்கை பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.