மேலும் அறிய

கடல் தாயின் குழந்தைகளுக்குத் துரோகம் செய்யலாமா? - கொதிக்கும் அன்புமணி!

மீனவர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிடுக! - அன்புமணி இராமதாஸ் கண்டனம்

சென்னை: சென்னை அருகே கோவளம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

சென்னை பெருநகர மக்களுக்கு குடிநீர் வழங்கி நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம் கோவளம் பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் ஊழல் செய்யும் நோக்குடன் திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பங்கழிகளை அழித்து 5,161 ஏக்கர் நிலப்பரப்பில் மாமல்லன் நீர்த்தேக்கத்தை அமைக்கும் பணிகளை திமுக அரசு தொடங்கியிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மேடவாக்கம், பள்ளிக்கரணை தொடங்கி சோழிங்கநல்லூர், மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், 1.66 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இந்தப் பகுதிகளுக்கு தினமும் 17 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர எல்லையும், மக்கள்தொகையும் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிகரித்து வரும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், சென்னையில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் இந்தக் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இயற்கை நமக்கு அளித்த கழிவெளிகளை அழித்து இத்தகைய நீர்த்தேக்கங்களை அமைப்பது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கவே முடியாது.

மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி இயற்கையின் அதிசயம் ஆகும். இங்கு தான் கடல் நீரும், நன்னீரும் கலக்கின்றன. அதனால், இந்த பகுதியில் தான் அரிய வகை நண்டு, இரால், மீன்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன, அதுமட்டுமின்றி, சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய இந்த நீர்நிலையின் தனித்துவமான தன்மைக்காகத் தான் இங்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடமாக உள்ள இப்பகுதியை நீர்த்தேக்கம் என்ற பெயரில் அடைத்து விட்டால் இதன் தனித்துவம் அழிந்து விடும். அதனால், இப்பகுதியில் உள்ள மீன்வளம் அழிந்து விடும்; அதுமட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் வலசை வருவதும் நின்று விடும். இவ்வளவு பாதிப்புகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் ஏற்படுத்தும் மாமல்லன் நீர்த்தேக்கம் தேவையா? என்பது தான் எனது வினா.

மாமல்லன் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு இந்த பகுதியில் மீன் பிடிப்பது தான் வாழ்வாதாரமாகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதால் அங்குள்ள மீன் வளம் முற்றிலுமாக அழிந்து விடும். அதனால், 5000 மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக பல இடங்களில் புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அது ஏமாற்று வேலை ஆகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி தான் கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதி ஆகும். அங்கு உள்ள இயல்பான நீர் கால்வாய்களில் வரும் போது தான் அவற்றில் நண்டு, இரால் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அந்தப் பகுதியை நீர்த்தேக்கமாக்கி, அதன் தன்மையை மாற்றும் பட்சத்தில் எத்தனைக் கால்வாய்கள் அமைத்தாலும் அவற்றில் நண்டு, இரால், மீன்கள் உற்பத்தியாக வாய்ப்பில்லை.

மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவது அப்பகுதியில் உள்ள கழிவெளிகளை நம்பியிருந்த மக்களை  மட்டுமின்றி, கடல் வளத்தையும் கடுமையாக பாதிக்கும். உப்பங்கழி, கடல்முகத்துவாரம், சதுப்பு நிலங்கள் இணைந்த இந்தப் பகுதி தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொரித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களுக்கு வாழ்வாதாரமாகின்றன. நீர்த்தேக்கம் என்ற பெயரில் இந்தப் பகுதி அழிக்கப்பட்டால் அது கடலில் மீன்வளம் குறைவதற்கு முதன்மைக் காரணமாக மாறும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படியும் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவது சட்டவிரோதம் ஆகும். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி உருவாக்கப்பட்டு வரும் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின் வரைபடத்தில் மீனவர்களின் மீன்பிடி பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் அந்தப் பகுதியில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதனால், திமுக அரசு திட்டமிட்டே மீன்பிடி பாடுகளை பதிவு செய்யாமல் விட்டு, அதன் மூலம் இந்தத் திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களுக்கு துரோகம் செய்கிறது. கடல்தாயின் குழந்தைகளான மீனவர்கள் இந்தத் துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள்.

மக்கள் நலனிலும், சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் பொதுவெளியில் விவாதம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அத்தகைய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை இது குறித்த எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தேர்தல் வரவிருக்கும் நிலையில், தங்களின் பழைய தவறுகளை மறைக்கும் நோக்குடனும், ரூ.342 கோடியில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்படுவதால் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பணப்பயன்களை கருத்தில் கொண்டு தான் இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படுகிறது.

கோவளம் பகுதியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் ஆகும். இதை உணர்ந்து மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் துணை நிற்பது என பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட திமுக அரசு மறுத்தால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய ஆட்சியில் இத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட மீனவர்களின் நலன்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. எடுக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
எங்க தலைவரை திமுக மிரட்டியதா?.. ஆதவ் பேச்சால் சர்ச்சை.. அடித்துக்கொண்ட விஜய் - ரஜினி ரசிகர்கள்!
எங்க தலைவரை திமுக மிரட்டியதா?.. ஆதவ் பேச்சால் சர்ச்சை.. அடித்துக்கொண்ட விஜய் - ரஜினி ரசிகர்கள்!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget