90-களில் விற்கப்பட்ட மிட்டாய்களை கஷ்டப்பட்டு தேடி அலைந்து வாங்கி வந்து கரூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆயுத பூஜை பண்டிகை அன்று புதிதாக 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்றை தொடங்கி உள்ளனர்.




1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான தாத்தா, பாட்டிகள் 90ஸ் கிட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் 1990 காலகட்டங்களில் பிறந்து குழந்தைகளாக வளர்ந்து வந்த தற்போதைய இளைஞர்கள், இந்த கடைகளில் அதிக அளவில் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருப்பார்கள். 




1990-களில் பள்ளிக்கு சென்று படித்த குழந்தைகளின் தின்பண்டமே இந்த மிட்டாய்கள் தான். காலம் மாற, மாற அந்த மிட்டாய்களும் மாறிடுச்சு. ஆனாலும், 90-ஸ் கிட்ஸ் பலரும் சின்ன வயசில் சாப்பிட்ட மிட்டாய்களை மறுபடி சுவைத்து பார்த்திட மாட்டோமான்னு பல நாட்கள் ஏங்கியிருக்காங்க. 




கரூரில் மீண்டும் அந்த மிட்டாய்கள் எல்லாத்தையும் பெரியவங்ககிட்டேயும், இப்போ உள்ள குழந்தைங்ககிட்டேயும் கொண்டு சேர்க்கணும்னு 90-களில் விற்கப்பட்ட மிட்டாய்களை கஷ்டப்பட்டு தேடி அலைந்து வாங்கி வந்து கரூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆயுத பூஜை பண்டிகை அன்று புதிதாக 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்றை தொடங்கி உள்ளனர்.




ஜவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம், மம்மி டாடி பாக்கு என 90களில் சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மிட்டாய் வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.




கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இரு சக்கர வாகன பழுது நீர்க்கும் கடையில் ஆயுத பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பாதிரியார்.


 


தமிழக முழுவதும் ஆயுத பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜைக்கான பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி  ஆரஞ்சு, திராட்சை மற்றும் சந்தனம், விபூதி, சூடம், சாம்பிராணி , பூ , மாலை மற்றும் அழகு சாதன அலங்கார பொருட்களை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். 


 




 இந்நிலையில் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் ஆர்டிஓ ஆபீஸ் எதிரில் திலகவதி இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை உள்ளது. கடையின் உரிமையாளர் சரவணன் அழைப்பை ஏற்று கிறிஸ்துவ பாதிரியார் கலந்து கொண்டு ஜெபம் செய்தார். பின்னர் சாமிக்கு படைத்த பொறி, சுண்டல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆயுத பூஜை விழாவில் கிறிஸ்தவ பாதிரியார் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்துள்ளது.