Job Fair : 500+ காலிப்பணியிடங்கள்...! மே 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே பதிவு செய்யுங்கள்!
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22ம் தேதி நடைபெறும்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மே 2026-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மே 2026-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 வெள்ளிக்கிழமையன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் ITI, Diploma, B.E/ B.Tech, Nursing, Pharmacy மற்றும் இதர பட்டதாரிகள் கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















