புதிதாக 1,000 பேருந்துகளை  வாங்க 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன. விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகளும், கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன.