மோதிய லாரி... கீழே கவிழ்ந்த பள்ளி வேன்.! அலறி துடித்த மாணவர்கள்- நடந்தது என்ன.?
School Van Accident : ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடியில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது. இதில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த எல்கேஜி முதல் 7ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் காயம் அடைந்தனர்.

பள்ளி வேன் விபத்தில் சிக்கியது
தமிழகத்தில் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அதிலும் சிபிஎஸ்சி பள்ளியில் 10வது மற்றும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வானது தொடங்கியுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், இன்று காலையிலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பள்ளி வேன் விபத்தில் மாணவர்கள் சிக்கியது ஷாக் கொடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் வழக்கம் போல இன்று காலை பள்ளி வேனில் புறப்பட்டனர். பள்ளி வேனில் எல்கேஜி முதல் 7ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி.?
பள்ளி வளாகத்திற்கு அருகே மாணவர்கள் வேன் வந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி பள்ளி வாகனம் குழந்தைகளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வேன் சிக்கியதையடுத்து பள்ளி மாணவர்கள் அலறி துடித்துள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் அவசர அவசரமாக மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பாக சம்பவம் அறிந்த பெற்றோர்கள் பொதுமக்களும் பேருந்து கவிழ்ந்த இடத்தில் குவிந்து வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதும் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகள் சிதறி கிடந்தது. இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.























