ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இன்று ( ஜனவரி 24 ) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கையின் போது தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையிலும், தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டது.
- ரூ.91. 33 லட்சம் மதிப்பீட்டில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தெரிவித்துள்ளது.
- ரூ.50 லட்சம் செலவில் கவிஞர் முடியரசனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் தொண்டாற்றும் ஒருவருக்கு, கலைஞர் பெயரில், புதிய விருது ரூ. 10 லட்சம் , ஒரு சவரன் தங்கப்பதக்கம் , பொன்னாடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சண்டிகர் தமிழ் மன்றக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தை புனரமைக்க ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்
- தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழுக்கு பெருமை சேர்த்த சீகன் பால்கு-க்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
- எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பிறந்த நாள், தூத்துக்குடியில் அரசு விழாவாக கொண்டாடப்படும்
- முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
- ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு திருத்தணியில் திருவுருவச்சிலை
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு , ரூ. 50 லட்சம் செலவில் , சென்னையில் சிலை அமைக்கப்படும்.
- சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்புராயன் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
- ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வீரமங்கை இராணி வேலுநாச்சியருக்கு சென்னையில் திருவுருவச்சிலை!
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்!
- சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்