4 மாதங்களில் 178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தனியார் ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது - கரூர் மேயர் கவிதா கணேசன்

தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

Continues below advertisement

கரூரில் மாநகராட்சி தூய்மை பணியில் கடந்த நான்கு மாதங்களில் 178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தனியார் ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பேட்டியளித்தார்.

Continues below advertisement

 


நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில்கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் வெங்கமேடு பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொக்கி போன்ற அமைப்பு கொண்ட இரும்பு கம்பிகள் கொண்டு எடுத்து அகற்றினர். இதில்  தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 


 

இந்த முகாமில் சுமார் இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. மரக்கன்றுகள் நடும் பணியில் மேயர் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்: கரூர் மாநகராட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை தன்னார்வர்களை கொண்டு தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

 


 

எனது குப்பை எனது பொறுப்பு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததிலிருந்து சிமெண்ட் ஆலைக்கு நான்கு மாதங்களில் மட்டும் 178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 300 முதல் 350 டன் வரை பிளாஸ்டிக்  சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்படும், பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் பிரித்து வழங்கினால் அதனை நாங்கள் மறுசுழற்சி முறையில் தேவையான பொருள்களாகவும், மறுசுழற்சி செய்யாத பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

 

 

 

 

Continues below advertisement