தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.


28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


29.05.2023 முதல் 31.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை:


27.05.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். எனவே மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் – 40.0 டிகிரி செல்சியஸ், திருத்தணி 41.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 39.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் – 39.5 டிகிரி செல்சியஸ், நாகையில் – 39.3 டிகிரி செல்சியஸ் , பரங்ட்கிப்பேட்டையில் – 38.7 டிகிரி செல்சியஸ், கடலூரில் – 38.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் – 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் – 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.


மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாக தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.


Kiruthiga Udhayanidhi: செய்திதான் போலி.. போட்டோவாச்சும் நல்லா வைங்க.. ட்வீட் போட்ட கிருத்திகா.. அமைச்சர் உதயநிதி ரீ ட்வீட்..