1000 Rs Scheme For Women: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு  திருநங்கைகள், கைம்பெண்கள், தனித்து வாழும் பெண்கள், திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கிவைக்கிறது.  இத்திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை தமிழ்நாடு அரசு சூட்டியுள்ளது. இத்திட்டத்திற்காக 2023-2024 நிதியாண்டில் ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 


இந்நிலையில், இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார், யார் என்பது குறித்தும் சமர்பிக்கபடவேண்டிய ஆவணங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியானது. 


இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்.. யார்? 



  • மகளிர் உரிமைத்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

  • மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம். 


  • திருநங்கைகள், திருமணமாகாதவர்கள், தனித்து இருப்போர், கைம்பெண்கள்  தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவிகளாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    அதே நேரத்தில், கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 



  • ஆண்கள் தலைமையில் குடும்பம் இருந்தாலும், அக்குடும்பத்தில் உள்ள பெண் குடும்பத்தலைவியாக கருதப்படுவார்கள்.


யார் யாருக்கு இல்லை..



  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு.

  • சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்போர்,

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.

  • ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது.

  • 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை.

  • பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.

  • மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.

  • வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.

  • ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களில் உள்ள மகளிருக்கு உரிமைத் தொகை கிடையாது. 

  • தொழிலில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி ஜி.எஸ்.டி செலுத்துவோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.