Breaking | உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 04 Jul 2021 05:29 PM

Background

தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப் பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி விட்டது.எனவே, மார்க்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள...More

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பேபி ராணி மெளரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததால் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.