BREAKING | தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை நீட்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 02 Jul 2021 08:27 PM
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காற்றுடன் மழை

சென்னை அனகாபுத்தூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், துரைப்பாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை, பெருங்களத்தூர், வண்டலூரில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

துணை நடிகையின் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுப்பு

இந்தியன் 2 படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க மறுப்பு. லைகா நிறுவனத்தின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Background

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.