தருமபுரி மாவட்டம் பெரும்பாலும் வனப் பகுதிகளை கொண்டுள்ள மாவட்டம். ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட வனச் சரகத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் அரூர் அருகே உள்ள மொரப்பூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி, கீழ் மொரப்பூர், எட்டிப்பட்டி, மருதிபட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளில் மயில், புள்ளிமான், காட்டுப் பன்றி, காட்டெருமை,  உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் அதிகப்படியாக புள்ளிமான்கள் சுற்றி திரிகிறது. மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு நுழைந்து விடுகிறது.



 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வனப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனாலும் உணவு தேடி புள்ளி மான்கள், குரங்கு பள்ளம் அருகே சாலையில் பட்டப்பகலில் சுற்றி திரிகிறது. இந்நிலையில் குரங்கு பள்ளம் பகுதிகளில் அரசு மதுபான கடை இருப்பதால், மது பிரியர்கள் சாலையோரம் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்து வருகின்றனர். இந்நிலையில் பட்டப்பகலில் புள்ளி மான்கள் வனப் பகுதியை விட்டு வெளியே வரும்பொழுது சிலர் போட்டோ எடுக்கின்றனர். ஆனால் மதுப் பிரியர்களால் மான்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருந்து வருகிறது. மேலும் பகலிலே சாலையை கடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பகலில் புள்ளி மான்கள் வனத்தை விட்டு வெளியேறுவதை கண்காணிக்க வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மது பிரியர்களை புள்ளிமான் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

-------------------------------------------------------

 

தருமபுரி கோட்டை பரவாசுதேவர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்கக வாசல் திறப்பு-ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று பரவாசு தேவரை வணங்கி வழிபட்டனர்.

 

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் நிகழ்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. சுவாமி பூக்களால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமித பரமபத சொர்க்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வணங்கி வழிபட்டனர். சொர்க வாசல் திறப்பில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது. தருமபுரி சுற்றுள்ள கிராமபுறங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். சொர்க்க வாசல் திறப்பு அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சிறப்பாக செய்யபட்டிருந்தது.

 



 

தருமபுரி மாவட்டம் அரூர் பழையபேட்டையில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிய பெருமாள் சுவாமி கோயில் சொர்க்க வாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதற்காக இரண்டு மணியிலிருந்து திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அலங்கரிக்கபட்ட பல்லக்கில் கரிய பெருமாள் பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெருமாள் புறப்பாடு தொடங்கியவுடன், பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு சுற்றி வந்தனர். இதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் சுவாமியை வணங்கி வழிபட்டனர். சொர்க வாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.