Vinayagar Chaturthi 2024: 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' விநாயகர் சிலைகளுக்கு தடை விதியுங்கள் - சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை

அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் எனவும் சேலம் மாவட்ட விநாயகர் சிலை தயாரிப்பார்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

Continues below advertisement

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலை செய்யும் பணியில் சிலை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட விநாயகர் சிலை, பொம்மைகள் தயாரிப்பார்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில் "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" என்று சொல்லக்கூடிய அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனத்தை கொண்டு விநாயகர் சிலையை வட மாநில மக்கள் சிலர் செய்து வருகின்றனர். அவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு பத்து நாட்கள் முன்னதாக 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 10 அடிக்கும் மேல் செய்த சிலைகள் தேக்கம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. 

Continues below advertisement

இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிப்பாளர் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி உத்தமசோழபுரம் உடையாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில மக்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்ற தடை செய்யப்பட்ட ரசாயனத்தை கொண்டு விநாயகர் சிலை வடிவமைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். மேலும் ரசாயன வண்ணங்களை கொண்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு வகுத்த பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேப்பர் கூல் மற்றும் களிமண்ணை கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலை தயாரிக்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு உருவாக்கப்படும் சிலைகள் தத்ரூபாபாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் அது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்ல எனவும், ரசாயனம் வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது நீர் வாழ் உயிரினங்கள் பாதிப்படைகிறது. நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீரின் தன்மை ரசாயனத்திற்கு மாறுகிறது. இதனால் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்ட வேண்டும் என்பதையும் அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு பத்து நாட்களுக்கு முன்னதாக 10 அடிக்குள் மட்டுமே விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக 10 அடிக்கு மேல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தேக்கமடைந்து வர்த்தக ரீதியாக பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. எனது இந்த ஆண்டு அதுபோன்ற நிபந்தனைகள் ஏதேனும் இருந்தால் சிலை தயாரிப்பதற்கு முன்பாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

Continues below advertisement