மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட போக்குவரத்துறை அமைச்சர், அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிகிச்சை

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவு சாப்பிட்டு உணவு தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினரிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் தனது உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்  கொண்டார். குறிப்பாக தோள்பட்டை வலி சரியவதற்காக ஸ்கேன் எடுத்து பின்னர் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறுகையில், “போக்குவரத்து துறையில் என்னென்ன குறைகள் உள்ளது. அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்போம். ஒவ்வொரு குறைகளாக கேட்டறிந்து அதை தொகுத்து முதல்வரிடம் கொடுத்து அதை  நிறைவேற்றுவோம் அதை நிச்சயம் செய்து கொடுப்போம். அனைத்து துறை அமைச்சர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்; இது மக்களுக்கான ஆட்சி. இதுவரை எப்படி இருந்ததோ தெரியாது, இனிமேல் அவ்வாறு இருக்காது. நான் அமைச்சராக இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளேன். ஒவ்வொருவரும் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். நல்லமுறையில் அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும்; மருத்துவமனையில் அசுத்தம் செய்யாமல், தனது வீட்டை போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுசொத்தை தனது வீடாக நினைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லதற்காக தவறு நடக்கும் இடத்தில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த தடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை

அடிமையாக இருந்த சுதந்திரமாக உள்ளார்கள்

சேலம் அரசு மருத்துவமனையை நிச்சயம் மேம்படுத்துவோம்; நல்லமுறையில் அரசு மருத்துவமனையில் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த கால ஆட்சி போல சூழல் விளக்கு போட்டு சுற்றும் வேலையில்லை அடிமையாக இருந்த மக்கள் சுதந்திரமாக தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உள்ளார்கள். நேர்மையாக மக்கள் வாக்களித்தது தமிழக முதல்வர் விஜய்க்காக தான்.

அரசு பேருந்துகளில் உள்ள பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஆலோசனை நடத்தி தமிழக முதல்வர் கவனத்திற்கு அனைத்து குறைகளும் கொண்டு செல்லப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்படும். எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி இருக்கும். அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்”என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Embed widget