மேட்டூர் நீர் தேக்கத்தில் ரசாயன கழிவுகள் கலப்பால், தண்ணீர் பச்சை நிறமாக மாறிவருகிறது என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்
ஒரு சில நாட்களாக காவிரி நீர் பச்சை நிறமாக மாறி வருவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணையில் நீர்மட்டம் 110 கன அடியை எட்டியுள்ள நிலையில் அணை முழுவதும் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் பச்சையாக மாறி வருவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள புனித நதிகளில் கங்கைக்கு இணையானது காவிரி. ஆனால் தற்போது காவிரி நீரைப் பயன்படுத்துவதால் நோய் ஏற்படும் என சென்னை ஐஐடி நிறுவன ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. காவிரி நீரில் கார்சினோஜென் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் கலக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தினமும் கோடிக்கணக்கான லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுகிறது. இதனால் காவிரியில் குளித்தால் நோய் தீரும் என்ற கருத்து மாறி காவிரியில் குளித்தாள் நோய் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது.
காவிரியில் கலக்கும் மருந்து மற்றும் உலோக மாசுகளால் மட்டுமன்றி மனிதர்களுக்கும் மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என்பது ஆய்வில் தெரிவித்துள்ளது. மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி, சின்ன மேட்டூர், மேட்டூர் அணையின், வலது மற்றும் இடது கரை பகுதிகளில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. எனவே காவிரி கரையோரம் உள்ள மாலைகளை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாசுபட்ட காவிரி நீரைப் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம் என சென்னை ஐஐடி நிறுவன ஆய்வில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணை மற்றும் அதன் நீர்த்தேக்க பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீரில் ரசாயன கழிவு சாக்கடை நீர் கரை ஒதுங்கியது துர்நாற்றம் வீசுவதோடு, காவிரி நீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசி வருவதாக கூறினர். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 13,172 அக உள்ளது. அணையின் நீர் மட்டம் 110.45 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 79.05 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது .