சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டோம். தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் மாநிலத்தின் கோரிக்கைகளை கேட்டு திட்டங்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் தனித்துப் போட்டியிட்டோம். காவிரி பிரச்சனைக்காக அதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி ஆணையத்தை பெற்றுக் கொடுத்தனர். அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேமுதிகவுடன் கூட்டணி மட்டும் கொண்டு போட்டியிட்டோம். நமக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது என்று தவறான பிரச்சாரம் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் ஆனது மோடிகா ராகுலுக்கா என்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் ஆனது எடப்பாடி பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்குமான தேர்தல். எங்கு பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார்.



திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது என்று திமுகவினர் டீக்கடையில் அமர்ந்து கொண்டு தவறான பிரச்சாரம் செய்கின்றனர். 2010ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்தை பிடித்து டெபாசிட் இழந்தோம். அதிமுக இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று திமுகவுடன் பிரச்சாரம் செய்தனர். அதன் பிறகு அடுத்து வந்த சட்டமன்ற பொது தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். 2026 சட்டமன்ற பொது தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சராக வருவார். எந்த மாற்றமும் கிடையாது. கடந்த மூன்று ஆண்டுகளில் திமுகவினர் ஏதாவது திட்டம் கொண்டு வந்துள்ளனரா? வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக ஆட்சியில் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. வருடம்தோறும் 6% உயர்த்தப்பட உள்ளது. மகளிர் கான ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள் அதற்காக காலகஅதிமுக போராட்டம் நடத்திய பிறகு தான் வழங்கினர். வரப்போகிற தேர்தலில் சுத்தமான கூட்டணியை எடப்பாடிக்கு பழனிசாமி அமைக்கப் போகிறார். அடிமட்ட தொழிலாளர்கள் இருந்து முதலாளிகள் வரை அனைவரும் திமுக ஆட்சி கலைய வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.


மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் நாம் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். விசைத்தறி தொழில் நலிவடைந்த போது இலவச வீட்டு சேலைகளை விசைத்தறையில் ஒட்டிக் கொள்ளலாம் என்று அதிமுக ஆட்சியில் தான் ஜெயலலிதா அனுமதி வழங்கினார். இன்று வரை விசைத்தறிகளில் வேட்டி சாலை ஓட்டப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த ரகங்கள் ஓட்டப்படுவதில்லை. திமுக ஆட்சியில் ஜூன் மாதமே உங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு விடும் 50% இலவச வேட்டிகளுக்காக ஓடும் மீதி தெருவில் துண்டு புடவைக்காக ஓடும். இந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் ஒருவருக்கு கூட ஆர்டர் கொடுக்கப்படவில்லை. இரண்டு மாதத்தில் ஒரு கோடி 65 லட்சம் வேஷ்டிகள் மற்றும் சேலைகள் தயாரிக்க முடியுமா. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைத்தறிகள் வேலையில்லாமல் எடைக்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது தொழிலாளிகள் முதல் முதலாளி வரை பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனால் தான் நமக்கு எதிர்காலம் என்று அனைவரும் பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.



அரசு பள்ளியில் படித்தவர் கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால்தான் அனைவருடைய தேவைகள் என்ன என்பதை அறிந்துள்ளார். ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக தான் 7.5% உள்ளிட ஒதுக்கீடு கொண்டு வந்தார். ஒவ்வொரு வருடத்திற்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எங்கேனும் கள்ளச்சாராயம் சாவு ஏற்பட்டதா. கள்ள சாராயத்திற்காக உயிர் எழுது அவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் உள்ளனர். இந்த திமுக அரசு உழைப்பவர்களை விட்டுவிட்டு கள்ளச்சாராயத்திற்காக உயிர் இருந்தவர்களுக்கு வாரி கொடுக்கிறது. இதுதான் திமுக ஆட்சியின் சாதனை. கள்ளச்சாராயத்தில் 69 பேர் இறந்து விட்டனர் 50 பேருக்கு கண் பார்வை போய்விட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதை பொருள் நிரம்பிய மாநிலமாக மாறிவிட்டது. பள்ளி முன்பே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. எந்த இடத்தில் நாம் சோர்வாக இருக்கின்றோமோ அங்கு நாம் தோற்கடிக்கப்படுவோம் என்று பேசினார்.