உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி, 17 வயது ஆன இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு கலவரம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும் பல சர்ச்சைகளை கிளப்பியது.மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
மாணவி ஸ்ரீமதி இறந்து ஓராண்டுகள் ஆகிய நிலையில் ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவரது சொந்த ஊரில் ஸ்ரீமதி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் தனது சொந்த செலவில் மணிமண்டபம் ஒன்றினை கட்டி வந்தனர். ஸ்ரீமதியின் நினைவு தினத்தையொட்டி ஸ்ரீமதியின் மணிமண்டபம் குடும்பத்தினரால் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தில் வலிகளை தாங்கி உறங்குகிறாள் உறவுகள் பல இருந்தும் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்