சேலம் பூம்புகார் விற்பனை நிலைய நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியில் புதிய வரவாக முதல்வர் விஜய் உருவம் பதித்த பொம்பை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் நிறுவனம் இயங்கி வருகிறது. சேலம் மாநகரப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகைகளையும் முன்னிட்டு கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இதனை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

 

Continues below advertisement

இன்று தொடங்கிய கொலு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், 18 சித்தர்கள் செட், கிரிவலம் செட், சோளிங்கர் செட், திருநாவுக்கரசர் செட், பஞ்சஸ்தலம் செட், மகாபாரதம் செட், அப்துல் கலாம், திருவள்ளுவர், விவேகானந்தர், முதல்வர் விஜய் போன்ற பல வகையான புதுமையான கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம் பெற்றுள்ளது. 

இதைத்தவிர, ராம்செட், குபேரன் செட், கும்பகோணம் செட், ஆழ்வார் செட், பழக்கடை செட், காய்கறி கடை செட் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட வகையான கொலு பொம்மைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் குறைந்தபட்சமாக ரூபாய் 15 முதல் அதிகபட்சமாக ரூபாய் 32,500 வரை கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகைகளையும் முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலையத்தின் மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.