சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி பிரதான சாலையில் தீபம் லாரி பட்டறை என்ற பஞ்சர் கடையை மோகன சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை லாரி டயருக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருந்த பொழுது அழுத்தம் காரணமாக டயர் வெடித்துள்ளது. இதைக் கண்ட ராஜ் குமார் என்பவர் உதவிக்கு சென்ற பொழுது பறந்து வந்த லாரி டயர் ராஜ் குமார் மீது விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.


 









லாரி பட்டறை உரிமையாளர் மோகன சுந்தரம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். படுகாயம் அடைந்த ராஜ் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த டயர் வெடித்த விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்று பிடிக்கும் பொழுது லாரி டயர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.