சேலம் மாநகர் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை கரும்பு ஜூஸ் கடைக்கு சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மகள் கனிஷ்கா உடன் கரும்பு ஜூஸ் குடிக்க வந்துள்ளார். அப்போது சிறுமி கனிஷ்கா கரும்பு ஜூஸ் பிழியும் கருவி அருகே நின்று கொண்டிருந்தபோது, சிறுமியின் இடது கை மேல் சட்டை கரும்பு ஜூஸ் பிழியும் கருவியில் பட்டு சிறுமியின் இடது கை உள்ளே சிக்கிக் கொண்டது. 


 






 


இதில் சிறுமி படுகாயமடைந்தார். உடனடியாக பெற்றோரும், அருகில் இருந்த பொதுமக்களும் சிறுமியை அழைத்து வந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரும்பு ஜூஸ் மெஷினில் சிறுமியின் கை சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.