தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவக்குமார் என்பவரது மகன் சாம்சரன் (17) திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பாலிடெக்னிக் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த சாம்சரனை நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் சிலர் சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து சாம்சரணின் தந்தை சிவக்குமாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உன் மகனை கடத்தியுள்ளோம், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், ஒப்படைப்போம். ஆனால் பணம் தராவிட்டால் பையனை கொன்று விடுவோம் என கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாம்சரனின் தந்தை சிவக்குமார் பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துவிடம் ரகசியமாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் டி.எஸ்.பி. சிந்து தனிப்படை அமைத்து, செல்போன் சிக்னலை வைத்து தீவீரமாக தேடியுள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தப்பட்ட மாணவனை, கடத்தல் கும்பலுடன் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மாணவன் கடத்தப்பட்ட 16 மணி நேரத்தில் காவல் துறையினர் உயிருடன் மீட்டனர்.
மேலும் கடத்தல் சம்பந்தமாக பக்கத்து வீட்டுக்காரரான ரித்தீஷ்குமார் (23) என்பவரை பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மாணவனை, பணத்திற்காக கூட்டாளிகள் ஆறு பேர் உதவியுடன் கடத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து சதீஷ்குமாரின் கூட்டாளிகளான அருண்குமார் (33) விஜி (30),சந்தோஷ் (22),முரளி (32),முருகேசன் (38), கோகுல் (30), உள்ளிட்ட 7 பேரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாணவனை பணத்திற்காக கடத்தியது உறுதியானதால், கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரையும் பாலக்கோடு காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து பாலக்கோடு பகுதியில் சினிமாவை போலவே ஒரு கோடி பணம் கேட்டு மாணவரை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை அதிகாலை 4-30 மணிக்கு 500 பெண்கள் பந்தங்களுடன் அம்மன் திருவீதி உலா.
தருமபுரி குமாரசாமிபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மன் திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து, முனியப்பனுக்கு மாவிளக்கு படையல் இட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் செல்லியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமும், விருந்தாளி அம்மனுக்கு 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் வானவேடிக்கையோடும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இந்த திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் பழங்கள் அலங்கரித்து சிறப்பு தரிசனத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தருமபுரி பேருந்து நிலையம் அருகே ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து அம்மனுக்கு தீ பந்தங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்களுகன் அம்மன் திருவீதி உலா ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் வழியாக நான்கு ரோடு, சந்தோஷ் திரையரங்கம், சாலை விநாயகர் கோவில் வழியாக முருகன் கோயில் தெரு வழியாக மாரியம்மன் கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மேலும் விழாவின் இறுதி நாளான இன்று பெண்கள், ஆண்கள் என ஒருவர் மீது கலர் பொடுகளை தூவி மஞ்சள் நீராட்டம் ஆடினர்.