சேலம் மாநகர் கோட்டை பகுதியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிமாணிக்கம் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது அவர் பேசியது, மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் தாய், தந்தை, மனைவி உட்பட குடும்பத்தினர் யாரும் கண் கலங்கவில்லை. ஏனென்றால் தமிழ் மொழிக்காக தங்களது குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்ததை பெருமையாக கருதினார். கலைஞர் ஆட்சி போது மிகப்பெரிய போராட்டங்கள் வாயிலாக இந்தி திணிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது அண்ணா சொன்னதைப் போல சட்டத்தில் இந்தியை திணித்துள்ளனர். வரும் காலத்தில் எதையும் மாற்றுவார்கள். சமுதாய விடுதலை அரசியல் விடுதலை பெற்றுள்ளோமே தவிர, சமுதாய விடுதலை பெறவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் காவலர், போஸ்ட்மேன் போன்ற பணிகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டால் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்ற உயர்பதவிக்கு வந்தனர் என்று கூறினார்.
ஐக்கிய முன்னணியின் போது ஆட்சியின் போது வழங்கப்பட்ட கல்வி கடன் மூலம் திரளானூர் உயர்கல்வி பயின்று வெளிநாட்டில் மென்பொருள் துறையில் பணியில் உள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் இலக்கணத்தையே வீணடித்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் "உறவுக்கு கை கொடு, உரிமைக்கு குரல் கொடு" என செயல்படுகிறார். தமிழகத்தில் அதிமுகவினர் இரண்டு தரப்புவனாக பிரிந்து இபிஎஸ் தான் வேண்டும் என ஒரு தரப்பினரும், ஓபிஎஸ் சசிகலா வேண்டும் என ஒரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். ஆனால் மக்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என யாரும் தேவையில்லை என்று கூறினார். கலைஞரின் ஆட்சியின்போது தோல்வி அடைந்த பாடங்களில் மட்டும் மாணவர்கள் மறு தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் உயர்கல்வி வரை வந்தனர். படிக்க வேண்டும் என ஆசை இருந்தால் போதும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் இந்த அரசு செய்து வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டுதான் உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் இருக்கும் மேல் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 51% பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர் என்றார்.
மேலும், பாஜக தலைமை தமிழ்நாட்டை உற்று நோக்கி வருகிறது. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் அனைத்து தலைவர்களையும் தரம் தாழ்த்தி பேசுகிறார். தமிழ்நாட்டில் நடந்தாலும், ஊர்வலம் வந்தாலும் சேற்றில் தாமரை மலர்வது போல வீண் முயற்சிதான். சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியை அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அவரது புகைப்படங்களை வைத்து அவரது புகழ் போற்றப்படுகிறது. ஆனால் கலைஞரின் முயற்சியால் கொள்கையால் அண்ணா பெரியார் தொடர்ந்து போற்றப்படுகிறார்கள். அதேபோல் மொழிப்போர் தியாகிகளை போற்றுவது திமுக தான் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.