தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக  மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஅள்ளி அணை 17 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை அடைந்தது.  இந்நிலையில் இன்று காலை தருமபுரி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, சிவாடி, கெங்கலாபுரம், பாளையம்புதூர், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளே தெரியாத அளவில் பனி பொழிந்ததால்,  வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தில் பயணித்தனர். மேலும் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் நிலையில், தற்போது மழையின் காரணமாக திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 



 

 

தருமபுரி மாவட்டம் பாளையம் டோல்கேட்டில் நல்லிரவு முதல் புதிய கட்டணம் அமல் ரூ15 முதல் 85 வரை கட்டணம் உயர்வு.

 



 

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 1 முதல் தருமபுரி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில்  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் முக்கிய வழித்தட தேசிய நெடுஞ்சாலையாக தருமபுரி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை( எண்.44) தான் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாளையம் புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை கடந்து செல்கின்றன. பாளையம்புதூர் டோல்கேட்டில் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வசூல் நடைபெற்று வருகிறது. இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

 



 

இதில் கார் ஒன்றுக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கு இதுனால் வரை 105 ரூபாயாக இருந்த கட்டணம், இன்று முதல் 120 ரூபாயாகவும், இலகு ரக வணிக மோட்டார் வாகனங்களுக்கு 185 ரூபாயில் இருந்து, 210 ஆகவும், கன ரக வாகனம், பேருந்துகளுக்கு 365 லிருந்து, 420 ஆகவும் மற்றும் பல அச்சு பொருந்திய வாகனம் 590-லிருந்த கட்டணம், இன்று முதல் 675 அளவிற்கு உயர்ந்துள்ளது.  இதுவரை இருந்த கட்டணத்தில் இருந்து ரூபாய் 15 முதல் 85 ரூபாய் வரை கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.