வீரபாண்டி ஆறுமுகம் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் - எம்எல்ஏ அருள் ஆவேசம்

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரபாண்டியார் சில நாட்களில் உயிர் இருந்ததாக தெரிவித்தனர்.

Continues below advertisement

சேலத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற்று தந்திருப்பார். தற்போது திமுகவில் வன்னியர்களை பற்றி பேசுவதற்கும், முதல்வர் ஸ்டாலினை எதிர்ப்பதற்கும் ஆளில்லாமல் உள்ளது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் வன்னியர்காக செய்த நன்மைகளை பட்டியலிட்டார். தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியிருந்தார்‌. 

Continues below advertisement

இதற்கு சேலம் பொறுப்பு அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அதில், "வன்னியர்களுக்கு அதிக நன்மை செய்தது திமுக" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது, "தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்கள் வன்னியர்களுக்கு துரோகம் செய்திருந்தாலும், மிக மிக துரோகம் செய்தவர் திமுக ஸ்டாலின் என்று தெரிவித்தனர். இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நோக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றினார் என்று கேள்வி எழுப்பினர்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் மணிமண்டபம் கட்டி திறப்பதில் என்ன பயன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்கள் தான் காரணம் என்று பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தனர். அப்போது இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி முழுமையாக செயல்படாதபோது அதன் பொறுப்புகளை ஸ்டாலின் நிர்வாகித்து வந்தார். அந்த சமயத்தில் சிறையில் இருந்து வெளிவந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வழி நீடுகளும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்‌. வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரபாண்டியார் சில நாட்களில் உயிர் இருந்ததாக தெரிவித்தனர்.

அமைச்சர் ராஜேந்திரன் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு ஆதரவாக அல்லது இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதமாவது எழுதினாரா? என்றார். மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் வன்னிய மக்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டார் அதுபோல வன்னியர்களுக்கு ஆதரவாக செயல்பட அமைச்சர் ராஜேந்திரனுக்கு தில்லும் தராணியும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன் தன் சமுதாயத்திற்காக எந்த நன்மையும் செய்யாதவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீரபாண்டியாரை புகழ்ந்து பேசியதற்காக அறிவாலயத்தில் இருந்து தனக்கே தெரியாமல் கொடுக்கப்பட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திரனின் அறிக்கை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தனர். திமுக வில் வன்னியர்களுக்கு ஒரு நீதியும் பிற சமூகத்திற்கு ஒரு நீதியும் வழங்கி பாரபட்சம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தில் இளைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தடை ஏற்பட்டுள்ளது. சமூகநீதி கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

Continues below advertisement