மேலும் அறிய

Mettur dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் இதோ

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 117 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 233 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் இதோ

அணையின் நீர் மட்டம் 87.65 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இது படிப்படியாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் இதோ

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 9.93 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 517 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,871 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 31.67 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 4.27 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 115 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
ராமதாஸுக்கு என்னாச்சு? பிரச்சாரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - பதறியடித்த தொண்டர்கள்!
ராமதாஸுக்கு என்னாச்சு? பிரச்சாரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - பதறியடித்த தொண்டர்கள்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
Embed widget