சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி வாகன பேரணி நடைபெற்றது. கன்னங்குறிச்சி, சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய வாகன பேரணிகள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. பின்னர் பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 150 அடி நீளமுள்ள தேசிய கொடியினை பாஜகவினர் ஏந்தி நின்றனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழக அரசுக்கு கொடிய அணிவகுப்பிற்கு பாதை மாற்ற அதிகாரம் உள்ளது. நாட்டில் கொடி அணிவகுப்பை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. தேசிய கொடியுடன் எங்களை போலீசார் கைது செய்திருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும். ஆனால் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை காப்பாற்றி உள்ளது என்றார்.



நாட்டு மக்கள் 500 ரூபாய்க்காக ஓட்டுப் போட்டதால் தேசியக்கொடி அணிவகுப்பிற்கு கூட அனுமதிக்காத அராஜக ஆட்சிக்கு அனுமதி தந்திருக்கிறார்கள் என்று கூறினார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது போன்ற ஆட்சியை இந்தியாவை பார்த்ததில்லை. லஞ்சம் லாவண்யம் ஊழலற்ற போதையற்ற இயற்கை சுரண்டலற்ற ஆட்சியை நாங்கள் அமைப்போம். ஆளுநர் தேநீர் விருந்துக்கு முதல்வர் செல்வது யாரை மீது எறும்பு அமர்வது போல என்று விமர்சனம் செய்தார்.


https://tamil.abplive.com/movie-review/entertainment/movie-review-thangalaan-review-tamil-chiyaan-vikram-malavika-mohanan-starring-thangalaan-movie-critics-review-rating-196730/amp