பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் அமைப்பு தேர்தலுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கர்நாடக மாநில பாஜக முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்கில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சட்டமன்றத்தில் நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் நடந்து கொண்ட முறை நீண்ட நெடுகாலம் பயணித்த ஜனநாயக அரசியலில் பயணித்து வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு அவமான செயலாக நடந்து வருகிறது. அவர் ஏதோ எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்கிறோம் என்று சொல்லி மிமிக்கிரி எல்லாம் செய்து எதிர்க்கட்சி தலைவருடைய பேச்சில் அரசாங்கத்தை எதிர்த்து பேசுகிறார். அவரைப்போல நடித்துக் காட்டுவது. அவரைப் போல மிமிக்ரி செய்வது கேவலப்படுத்துவது எள்ளி நகையாடுவது. இவை எல்லாம் சட்டமன்ற ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல என்று கூறினார். இந்த வயதிலும் துரைமுருகன் இது போன்ற நடந்து கொள்கிறார்கள் என்று எங்களைப் போல் அவருடன் பழகிய எல்லோருக்கும் மிகுந்த வேதனையை உருவாக்கியுள்ளது என்றார்.
இது போன்ற அரசியலை அவருக்கு யார் கற்று கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவரே அந்த தவறை செய்தாலும் முதலமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையை கண்டித்து மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் அதை ரசித்து மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல டங்ஸ்டன் பிரச்சனையில் மத்திய அரசுக்கு இதுவரை தமிழக அரசிடம் இருந்து கடிதம் ஏதும் வரவில்லை. மத்திய அரசு இடம் இருந்து கடிதம் வந்த பொழுது அதை எதிர்த்து பதில் சொல்லாதவர்கள். இப்பொழுது திடீரென்று மத்திய அரசும் சுரங்கத்தை தொடங்குவதற்கு தயாராக இல்லை என்பதை தெரிந்து கொண்டு ஏதோ அப்படி வந்துவிட்டால் நான் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் சவடால் விட்டுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையை தெரிந்து கொண்டு இங்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்காக முதலமைச்சர் பேசி வருகிறார். தமிழகம் சட்ட ஒழுங்கு கெட்டு போய் மிகுந்த தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிற நிலையெல்லாம் நாட்டு மக்களுக்கு இதை மறைப்பதற்காக சட்டமன்றத்தை பயன்படுத்துகிறார்கள். அதற்கு தகுந்தபடி சட்டமன்றத்தின் சபாநாயகரும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இந்த நிலை எல்லாம் மாற வேண்டும்.
திமுக குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவது பாரதிய ஜனதா கட்சி பின்னணியில் உள்ளதா என்ற செய்தி கேட்டதற்கு பதில் அளித்தவர், ஊழல் மிகுந்த காட்டாட்சி நடத்தி வரும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோளாக உள்ளது. திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் ஊழல் மிகுந்த திமுகவுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சி அதற்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக கைவினைக் கலைஞர்களின் திறமையை உலகறிய செய்யக்கூடிய மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை சாதிய முலாம் பூசி திமுக அரசு தடுத்து விட்டதாக குறை கூறிய கே.பி.ராமலிங்கம், 2047 இல் வலிமையான தேசத்தை கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கைவினை கலைஞர்களின் வருவாயை பெருக்கும் வகையில் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தி வருங்கின்றனர். கைவினை கலைஞர்களுக்கு வருவாய் பெருக்கி கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஸ்வகர்மா திட்டத்தின் சிறப்புகளை திமுக அரசு மறைத்து விட்டதாகவும் குறை கூறினார். தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் கைவினை கலைஞர்கள் திட்டத்தை முழுக்க முழுக்க தமிழக அரசு நிதியிலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.