சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆத்தூரில் இரண்டு விவசாயிகள் நிலத்திற்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து, அமலாக்கத்துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இலக்கிய அணி பாஜக கிழக்கு மாவட்டச் செயலாளருக்கு அமலாக்கத்துறை குறித்து எதுவும் தெரியவில்லை, ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தால் கூட எழுதியதை படிப்பாரா என்று தெரியவில்லை, இதில் அவருக்கும் இதற்கும் எதுவும் சம்பந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதை சம்மதமே இல்லாமல் பாஜக கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளருக்கும், அமலாக்கத்துறைக்கும் தொடர்பு படுத்துகிறார்கள். அந்த விவசாயிகள் குற்றம்செய்யவில்லை என்றால் விவசாயி கூட தான் நிற்பேன், அமலாக்கத்துறை கேட்டது என்னவென்றால் ஆதார் கார்டை வழங்குங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு முன்பாக இரண்டு விவசாயிகள் மீது வனத்துறை சட்டத்தில் காட்டெருமையை கொலை செய்த வழக்கு ஒன்று உள்ளது. மேலும் உங்களது வங்கிக் கணக்கை கொடுங்கள் சோதனை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறார்கள், இது தவிர என்ன கேட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினர்.



ஆதார் அட்டையும், வங்கி கணக்கும் கொடுக்கப் போகிறார்கள் அதை அமலாக்கத்துறை சோதனை செய்ய போகிறது. அதற்கு மேல் குற்றம் செய்யவில்லை என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் நானே களத்திற்கு வந்து முதல் ஆளாக அவரது விவசாய நிலத்தில் தர்ணா போராட்டத்தில் அமர்வேன் என்று கூறினார். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், ஒரு கட்சி நேரடியாக சென்று செயல்படுகிறது. இது மட்டுமில்லாமல் சேலம் இலக்கிய அணி கிழக்கு மாவட்ட செயலாளரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. நான் அவரை புகைப்படத்தில் தான் பார்த்தேன். சேலம் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட செயலாளர்களில் அவர் ஒருவர் என்றும் தெரிவித்தார். தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யும் பதிவேட்டில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் சாதி பேரை குறிப்பிட்டு தான் அறிக்கை குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையிலேயே தான் கொடுத்திருப்பார் தவிர வேறு எந்த காரணமும் இருக்காது. அமலாக்கத்துறை வருங்காலங்களில் இதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவில் குறிப்பிட்டதை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். தமிழக காவல்துறையின் மூலமாக பொதுவெளியில் வரும் வழக்குப்பதிவில் சாதி பேரை தூக்கி விடவேண்டும். தமிழ்நாட்டின் வழக்குப்பதிவில் சாதி பெயரை ஏன் கொண்டு வருகிறீர்கள். தமிழக அரசுக்கு சாதி வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். 



மேலும், தமிழகத்தில் கட்டாயமாக வன்கொடுமை சட்டம் வேண்டும், தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் சென்னை நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கையில் பணத்தை கொடுப்பதே முறையீடு செய்வதற்காகத்தான் அதனால் தான் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அடுத்து ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு என்று கொண்டு வருவார்கள். பொங்கல் தொகுப்பிற்கு நாடகம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தைக் கொடுப்பார்கள். ஒரு பட்டனை அழுத்தினால் உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் ஆனால் இவர்கள் வங்கி கணக்கில் தரமாட்டார்கள் என்றும் பேசினார். பொங்கல் தொகுப்பில் பணம் வருவது உறுதி எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது 5000 கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள் என்றும் கூறினார். திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள், திருச்சி மாநகரத்தை சுத்தம் செய்வதாக கேள்விப்பட்டேன், எவ்வளவு டன் குப்பை எடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஏழு டன் குப்பை எடுத்ததாக கூறியதாக தெரிவித்தார். தமிழகம் பிரதமர் வரும் போதெல்லாம், கட்சிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூய்மை பாரத் திட்டத்தை செயல்படுத்துவோம். தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அரசியல் பேசமாட்டார். குறிப்பாக மக்கள் சுகாதாரமாக உள்ளார்களா? குப்பைகள் எல்லாம் எடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார் வேறு எதுவும் பேசவில்லை என்றும் பேசினார்.