சேலம் மாவட்டம் நங்கவள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரிக்கபட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கரிக்காபட்டி மாரியம்மன் திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் உரையாற்றினார்.


அப்பொழுது அவர் பேசியது, அதிமுக ஆட்சி கல்வியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு உள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வியில் 2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2019-20 ஆண்டிலேயே அடைந்துவிட்டோம். ஆனால் திமுக ஆட்சியான 2011 ஆம் ஆண்டு நூற்றுக்கு 34 பேர் உயர் கல்வி பயின்று வந்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் 2019-20 ஆண்டி நூற்றுக்கு 56 பேர் உயர்கல்வி பயின்றனர். அந்த அளவிற்கு கல்வியில் அதிமுக ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது ஒரு திட்டமாவது ஏழைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி உள்ளீர்களா என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார்.



ஊழலுக்காக நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் ஸ்டாலின் ஆட்சிக்கு கொடுக்கலாம், தமிழகத்தில் உள்ள 234 தொகுதி மக்களுக்கான பிரச்சனைகளை எடுத்துக் கூறும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன், தமிழக முதலமைச்சருக்கு மக்கள் படும் கவலை மற்றும் சோதனை, வேதனை தெரியாத ஒரு மனிதராக உள்ளார். தமிழகத்தில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அடையாளம் தெரியாது, 5 அமைச்சர்கள் மட்டுமே சென்று பேசுவார்கள் எனவும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு காளை வெளியே வரும்போது வர்ணனையாளர்கள் காளையை தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று பேசுவார்கள். அதே போன்று தமிழகம் முதலமைச்சர் சீண்டிபார், தொட்டுப்பார் என்று பேசுகிறார். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமாட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். ரவுடிக்கும், முதலமைச்சருக்கு என்ன வித்தியாசம் உள்ளது. முதலமைச்சர் இவ்வாறு பேசலாமா? என்ன பேசவேண்டும் என்பதை பற்றி தெரியாமல், புரியாமல் உள்ள ஒரு பொம்மை முதலமைச்சர் தான் தமிழக முதலமைச்சர் எனவும் விமர்சனம் செய்தார்.



தமிழக மக்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த அரசாங்கத்தை நம்பி இருந்து விடாதீர்கள். செல்வமே குழந்தைகள் நலன். குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும், அந்தளவுக்கு நாடு மோசமாகிவிட்டது. போதை பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழக அரசாங்கம் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் 6000 மதுபான கடைகளில் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு கோடி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மதுபாட்டிற்கு பத்து ரூபாய் ஊழல் செய்கின்றனர்.


ஒரு நாளைக்கு பத்து கோடி என்றால் ஆண்டிற்கு 365 கோடி மேல் இடத்திற்கு சென்று கொண்டுள்ளது. இதைதொடர்ந்து பேசியவர், வெயிலுடைய அருமை நிழலுக்கு போனால் தான் தெரியும் அதேபோன்று கஷ்டப்பட்டு இருந்தால் தான் கிராமத்து மக்களின் நிலை தெரியும்.தமிழகம் முதல்வர் இனியாவது மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் போனது போகட்டும் எனவும் கூறினார். மேலும் மக்களின் வரிப்பணத்தை எடுத்து 82 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் தந்தைக்கு நினைவுச் சின்னம் அமைக்கிறார். இரண்டு கோடியில் நினைவுச் சின்னம் அமைத்துவிட்டு, 80 கோடியில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொண்டுங்கள் மாணவர்கள் பயனடைவார்கள் பயனடைவார்கள் என்றார். விரைவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.