சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 


பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக எதிர்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சி செய்ய முடியாத விஷயங்களை அதிமுக, ஆளுங்கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் உணர்வுகளை சொல்லி தூங்குகின்ற கட்சியை தட்டி எழுப்பி சொல்லுகின்ற கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போது ஆளும் கட்சியின் முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை‌. குழந்தை செல்வங்கள் விஞ்ஞான கல்வி பெறுவதற்காக மடிக்கணினி கொடுத்தோம், துருஷ்டமாக ஆளும் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மடிக்கணினி திட்டத்தை கைவிட்டது. அதிமுகவின் நல்ல பல திட்டங்களை திமுக கைவிட்டுக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நல்ல பல திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை.



தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி என்று தமிழக முதல்வர் என்று சொல்கிறார் முதலமைச்சர், ஊழல் உடைய வளர்ச்சி தான் எங்கு பார்த்தாலும் பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும், அகற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்து மாதிரி, முதலமைச்சரும், அமைச்சர்களும் உள்ளிட்டோர் பதறிப் போய் உள்ளனர். கொள்ளையடித்ததை சொல்லிவிடுவார் என்று பதறிப் போய் உள்ளனர். இதனால் தமிழக முதல்வர் அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறார். தமிழக முதல்வர் வீடியோ மூலமாக பேசியிருந்தார். ஸ்டாலின் என்ற தனிமனித பேசியிருந்தால் தப்பு கிடையாது, முதலமைச்சர் ஸ்டாலின் அடித்தால் திருப்பி அடிப்போம் என்று கூறுகிறார். ரவுடிக்கும் முதலமைச்சரும் என்ன வித்தியாசம். இதற்காகவா தமிழக மக்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுத்தார்கள். திருப்பி அடிப்பேன் என்று கூறுவது ரவுடிகள் போன்று பேசுகிறார். முதலமைச்சர் தகுதிகளை எண்ணி வார்த்தையை வெளிவிட வேண்டும், அளந்து பேச வேண்டும், தமிழக மக்களை பாதுகாப்பு வேண்டுமென்ற கடமை முதல்வருக்கு உள்ளது. அதை எண்ணி கவனத்துடன் பேச வேண்டும். ரவுடி போல பேசும் முதலமைச்சரால் தமிழகத்தில் ரவுடிகள் தலைதூக்குவார்கள். ரவுடி போல் பேசக்கூடாது இது முதல்வர் பதவிக்கு தகுதியானது அல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.