தருமபுரியில் ஸ்ரீராமாஸ்ரம கட்டளைக்கு சொந்தமான சுமார் 1000கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் 1948ம் ஆண்டு கோவில் நிர்வாகத்திற்கு எழுதி வைக்கப்பட்டது. அந்த சொத்துக்கள் பராமரிப்பு குறித்து கண்காணிக்க தக்கரும் நியமிக்கபட்டு இருந்த சூழலில் சரியான கவனிப்பார் இன்றி   அறநிலையத்துறை கவனத்திற்கு  வராமல் 1948ம் ஆண்டு முதல் இருந்துள்ளது. அந்த சொத்துக்களில் பல குடியிருப்புகள் தற்பொழுது உள்ள நிலையில்  கோவில் நிலங்களை மீட்டு அறநிலைய துறைக்கு ஒப்படைக்கும் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்  கவனத்திற்கு பொதுமக்கள் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

 



 

இதனை அடுத்து இன்று நேதாஜி பைபாஸ் சாலையில் ஸ்ரீராமாஸ்ரமத்திற்கு சொந்தமான சுமார் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும்களை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்திருந்த கோப்புகளையும் ஆய்வு செய்ததில் அந்த நிலங்கள் ஸ்ரீராமாஸ்ரம கட்டளைக்கு சொந்தமானவை என உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கட்டளைக்கு சொந்தமாக பாப்பாரபட்டி மற்றும் பென்னாகரத்திலும் சொத்துக்கள் இருந்தது கண்டுப்பிடிக்கபட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஸ்ரீ ராமாஸ்ரம  கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் 11 ஏக்கர் உள்ளது அதன் மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான  கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்து.இந்த சொத்துக்கள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 



மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்



தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டுத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 



 

இதில்  மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 50 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டம், இலகு பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஒற்றையர், இரட்டையர் இறகு பந்து போட்டி, மேசை பந்து போட்டி, அடோப்டட் வாலிபால், எறிபந்து போட்டி, கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இவ்விளையாட்டி போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.