தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சரவணன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு விடுதியில் வைத்து மூன்றாம் ஆண்டு படிக்கும் 4 மாணவர்கள் சரவணன் ராகிங் செய்துள்ளனர். அப்பொழுது கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சரவணன் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை வாபஸ் பெறும்படி சீனியர் மாணவர்கள் மிரட்டியுள்ளனர் அந்த அச்சமடைந்து புகாரை சரவணன் வாபஸ் பெற்று உள்ளார்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நான் பாதிக்கப்பட்டவன் என்று வைத்து, தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சக மாணவர்கள் நேரில் சென்று பார்த்தபோது மாணவர் சுய நினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.

 



 

இதனை அடுத்து சரவணன் மீட்ட சக மாணவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்த மாணவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் கடந்த 23ஆம் தேதி இரவு விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ததும், அதில் சரவணனை முட்டி போட வைத்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள் புகாரினை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.



 

இதுதொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் புகாருக்குள்ளான நான்கு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வார காலத்திற்கு நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக இரண்டு காப்பாளர்களை மாற்றியுள்ளனர். தொடர்ந்து விருப்ப அடிப்படையில் இரண்டு காப்பாளர்கள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் தினந்தோறும் இரவில் விடுதியில் ஒரு மருத்துவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போல் மருத்துவ கல்லூரி முதல்வர் தலைமையில் 3 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு  அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். தொடர்ந்து மாணவர் சரவணன் மன உளைச்சலில் இருந்து வருகிறார். அதனால் அவர் முழுமையாக குணமடையும் வரை பெற்றோருடன் இருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராகிங் தடுப்பு குழுவில், புகாருக்குள்ளான 4 பேரில், இரண்டு மாணவர்கள் தலைவர், செயலாளர் பொறுப்பில் உள்ளார்கள் தற்போது அவர்களது பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுப் போன்ற சம்பவம் நடைபெறாது என தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.