தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னார் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக அணையில் தண்ணீரில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சின்னாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான தளி, தேன்கணிக்கோட்டை, அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பெட்ட முகிலாலம், ஐயூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாள் பெய்த மழையில், சின்னாற் அணையின் நீர்மட்டம் 15 அடி உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்து. இந்நிலையில் தொடர்ந்து இன்றைய காலை நிலவரப்படி அணையின் கொள்ளளவு 50 அடியில் 48 அடி வரை, தண்ணீர் நிரம்பியது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் வெளியேறும் இரண்டு கதவுகளிில் வழியாக சின்னாற்றில், வினாடிக்கு 400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டள்ளது. மேலும் நீர்வரத்து தொடர்ந்து வருவதால், சின்னாறு பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் திறப்பால் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பென்னாகரம் அருகே ஆறு மாதத்தில் இரண்டு முறை நிரம்பிய கெட்டூர் ஏரி- சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் கிராம மக்கள். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெட்டூர் ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் ஜனவரி மாதம் கெட்டூர் ஏரி நிரம்பியது. கடந்த சில மாதங்களில் தண்ணீர் வற்றிப் போய் வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் கன மழை பெய்து வந்தது. இதில் பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரி கடந்த ஆறு மாதத்தில் தற்பொழுது இந்த தொடர் மழைக்கு இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. ஏரி நிரம்பி உபரி நீர் அருகில் உள்ள ஏரிக்கு வயல்வெளிகள் வழியாக வெளியேறி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரிக்கு வரும் தண்ணீர் சாலையை கடந்து வருவதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஏரி நிரம்பியதால் பென்னாகரம் சாலையில் தண்ணீர் நிரம்பி தேக்கமடைந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரிலேயே மிதந்து செல்கின்றன. மேலும் புதிய நீர் என்பதால் ஏரியில் உள்ள மீன்கள் எதிர்நோக்கி செல்வதால், சாலையிலேயே மீன்கள் துள்ளி குதிக்கின்றன. இதனை கண்ட பொதுமக்கள் சாலையில் வரும் மீன்களை பிடித்து மகிழ்கின்றனர். மேலும் ஏரி நிரம்பி, வறண்டு ஆறு மாதத்திற்குள்ளாக மீண்டும் ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்