தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரொக்கம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலகன்,பொங்கல் பரிசு தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.




இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1077 நியாய விலை கடைகளில் உள்ள 4,66, 594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கும் நிகழ்வு ஐந்து நாட்கள் நடைபெறும்.