தருமபுரி நகர நான்கு ரோடு பகுதியில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஆட்டம், பாட்டு பாடி கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானங்களால், உடலில் ஏற்படும் பாதிப்புக்கள், பின்விளைவுகள் குறித்து நடித்து காட்டினர்.
அதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் இதனை தவிர்ப்பதற்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் குடிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் கள்ளச் சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை குறித்த தகவல் பொது மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் அளிக்க வேண்டும். இதன் மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார்.
கள்ளச் சாராயம் மற்றும் சட்டவிரோத மது பானங்கள் விற்பது தெரியவந்தால் 10581 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் தங்களுடைய பெயர் விபரங்கள் உள்ளிட்டவை எக்காரணம் கொண்டும் வெளியாகாது. தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவிகள் 353 பேருக்கு தலா 5,000 உதவித் தொகை வழங்கிய தனியார் நிறுவனம்
தருமபுரி நகரில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கு தரைமபுரி மாவட்டத்தில் உள்ள 353 அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அரசு பள்ளி படிக்கும் 353 மாணவிகளுக்கு, தலா 5,000 என 17 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.