காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது.
தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, அதிகரித்து வினாடிக்கு 14,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டும் அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக மாறி, மாறி வருகிறது.
ஏாியூா் அடுத்த பெரும்பாலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பியதால் பாதியிலையே முடிந்த கிராம சபை கூட்டம்.
அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தருமபுாி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளிலும் கிராம சபை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் காரசாரமான விவதாங்களுடன் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தருமபுாி மாவட்டம் ஏாியூா் ஒன்றியம் பெரும்பாலை ஊராட்சியில் பேருந்து போக்குவரத்து இல்லாத ஒரு கிராமத்தில் கிராம சபை கூட்டம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலை ஊராட்சியில் 12 வாா்டு உறுப்பினா்கள் உள்ள நிலையில் 6 வாா்டு உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். இந்த கிராமசபை கூட்டத்தில் ஆகஸ்ட் 15 ல், கிராம சபா கூட்டம் நடைபெற்றது போல தாங்களே கையெழுத்து போட்டு கொண்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் நிதியான 18.5 லட்சம் எவ்வாறு செலவிடப்பட்டது என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேட்டை குறித்தும் கேள்விகள் எழுப்பபட்டது.
ஆனால் இதற்கு உாிய வரவு செலவு கணக்கை திமுகவை சோ்ந்த ஊராட்சி தலைவா் கஸ்தூாி மற்றும் ஊராட்சி செயலாளா் முருகன் பதில் கூறாமல் இருந்தனா். மேலும் பெண் கவுன்சிலா்களின் கணவா்கள் தான் கிராம சபையில் கலந்து கொண்டனா். அப்பொழுது காரசாரமான விவதாங்கள் நடைபெற்றது. இதனையடுத்து கிராமசபையில் இருந்து 4 வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மேலும் திமுகவை சேர்ந்த நபர்கள் கூட்டத்தில் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி, கேள்வி கேட்ட இளைஞர்களை பேசியதால் மக்களும், இளைஞர்களும் புறக்கணித்து சென்றனர். இன்றும் கிராம சபை கூட்டம் நடந்து முடிந்தது என்று தங்களுக்குள்ளே கையெழுத்து போட்டு கொண்டனர். இதனால் கண்துடைப்புக்காக கிராம சபை நடைபெற்றது. இதேபோல் தொப்பூா் அருகே உள்ள உம்மியம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு புகாா்கள் எழுப்பபட்டு காரசாரமான விவதாங்கள் நடைபெற்றது.