தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே  ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த  வளாகத்தில் தருமபுரி மேற்கு சார்பதிவாளர் அலுவலகம், இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அலுவலகம், மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் என ஐந்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திர பதிவிற்கு வரும் பொதுமக்களிகற் அளவுக்கு அதிகமாக இலஞ்சம் பெறுவதாக, தருமபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
 
 
இதனையடுத்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தருமபுரி மேற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில், அலுவலக கணக்கில் வராத 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர். இதனை கைப்பற்றிய இலஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அலுவலகத்தில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் குறித்து தருமபுரி மேற்கு சார் பதிவாளர் லட்சுமிகாந்தன், மற்றும் அலுவலர்களிடம் இடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தருமபுரி பத்திரவு பதிவு அலுவலகத்தில், இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதால்,பெரும் பரபரப்பானது.
 

 
தருமபுரியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு - பட்டை நாமம் போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் 
 
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  அருகே சிப்காட் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இதனால் சிப்காட் அமைக்க நல்லம்பள்ளி பகுதியில், சுமார் 1,773 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி உள்ளது.  மேலும் இப்பகுதிகளில் ஜவுளி பூங்கா  மற்றும்  எலக்ட்ரிக் பைக்குகள்  தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளனர்.  மேலும் 400 ஏக்கர்  நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த  சர்வே செய்து வருகின்றனர்.  
 
இதில்  அதியமான்கோட்டை அருகே உள்ள வெத்தலைக்காரன் கொட்டாய் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கு மேல்  விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர்.  இந்த விவசாய நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு, தொன்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்தாமல்  இதேப் பகுதியில் தரிசு நிலங்கள் உள்ளது. அந்த  இடங்களில் சிப்காட் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்து, தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருவதால், கிராம ம்க்கள் ஒன்றிணைந்து, தங்களது கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது  கருப்பு கொடி ஏந்தியும், கிராமத்தில உள்ள கோவில் அருகில் அமர்ந்து, வாயில் கறுப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
 
மேலும் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைவரும்  நெற்றில் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து  பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன போராட்டத்தில் ஈடுப்பட்னர். தொடர்ந்து கிராம மக்களின் இந்த நூதன போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.