தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 27 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த பணிக்கு 10 வகுப்பு என்பதே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6486 விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் 6 நாட்களாக பிரித்து தினம் 1100 பேருக்கு நடத்த திட்டமிட்டது. தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் திங்கட்கிழமை தொடங்கியது. இந்த நேர்காணல் வரும் 23ஆம் தேதி வரை நடக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பித்த மொத்தம் 6486 பேரை, தினசரி 1100 பேருக்கு அதிகாரிகள் நேர்காணலை நடத்த வருகின்றனர். இதில் 1100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 700 முதல் 900 வரை மட்டுமே நடைபெறுகிறது. 

 



 

இதில் முதலில் விண்ணப்பங்களை சரிபார்த்து அலுவலர்கள், நேர்காணலில் மாவட்டங்களை பற்றியும், பொது அறிவு குறித்த கேள்விகளையும், கால்நடைகளை பராமரிப்பு, தீனி கொடுப்பது குறித்த கேள்வி கேட்கின்றனர்.மேலும்  கலந்து கொண்டவர்களுக்கு கால்நடைகளை நன்கு கையாளத் தெரிந்திருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதற்காக முன்னதாகவே துறை சார்பில் முகாம் நடந்த கல்லூரி வளாகத்தில் 10 மாடுகள் கட்டி வைத்திருந்தனர். மேலும்  10 சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேர்காணலில் கலந்து கொண்டவர்களை வரிசையாக அழைத்துச் சென்று மாடுகளை மரத்தில் கட்டுவது எப்படி என செய்து காட்ட வைத்தனர். பின்னர் அவர்களை சைக்கிள் ஒட்டி காட்டச் செய்தனர். பெரும்பாலானவர்கள் சைக்கிள் ஓட்டிய போதிலும் மாடுகளை கட்டுவதில் பெண்கள் மட்டுமே சரியாக செய்து காட்டினர். தொடர்ந்து 23ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

 


 

தரூமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில், 27 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 6486 பேர் விண்ணப்பத்தினர். மேலும் உதவியாளர் பணிக்கு 10 வகுப்பு என தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலையில்லாத காரணத்தால், பிஇ, எம்இ, எம்பிஏ, எம்சிஏ, பிஎட் உள்ளிட்ட பல்வேற் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்தவர்கள் ஏராளமானோர் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தனர். மேலும் 27 காலி பணியிடங்களுக்கு 6486 விண்ணப்பங்கள், இதில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுள்ளவர்கள் 1000 பேர் கூட இருக்கமாட்டார்கள். இந்த நேர்காணலுக்கு வந்த பட்டதாரிகள், தாங்கள் படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை. ஆனால்  உதவியாளர் பணிக்கான படிப்பு தகுதி நமக்கு இருக்கிற என இந்த நேர்காணலுக்கு வந்துள்ளனர்.தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் பட்டதாரிகள் கூட, உதவியாளர் பணிக்கு செல்ல வேண்டும் என தூண்டுகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

 



 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பெயிலாகி இருந்தால் போதும் ஆனால் பட்டம் படித்தவர்களுக்கு கூட வேலை கிடைக்காமல் இருப்பதால், இப்பணிக்கு அதிகம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். குறிப்பாக பிஇ, எம்ஏ, எம்பிஏ, பிஎல், பிஎஸ்சி என பெரும்பாலும் இன்ஜினியர்கள் பட்டதாரிகளே விண்ணப்பம் செய்துள்ளனர். நாங்கள் எங்களுக்கான விதிமுறைப்படி தான் நேர்காணலை நடத்தி வருகிறோம் என்றனர்.