புதுச்சேரியில் முதியவர் ஒருவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இளைஞர் தாக்கியதைக் கண்டு மகள் கதறி அழுத நிலையில், இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

முதியவரை தாக்கிய இளைஞர்

புதுச்சேரியில் முதியவர் ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற கார் மீது முதியவரின் வாகனம் லேசாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளைஞர், முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அந்த இளைஞர் முதியவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். முதியவரை தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி தொடர்ந்து தாக்கினார்.

Continues below advertisement

தந்தையை காப்பாற்ற கதறிய மகள்

தனது தந்தை தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள், அவரைக் காப்பாற்ற முயன்றார். தந்தையை அடிக்க வேண்டாம் என அந்த இளைஞரிடம் கதறி கெஞ்சினார். இருப்பினும், இளைஞர் தொடர்ந்து முதியவரை தாக்கியபடியே இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது வித்தியாசம் பார்க்காமல் முதியவரை இளைஞர் அடித்தற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இளைஞரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்

இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அமைதியாக இருக்கவில்லை. முதியவரை தாக்கிய இளைஞரை சுற்றி வளைத்த அவர்கள், அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதியவரை தாக்கிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வயதில் மூத்தவரை நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.