ஆபரேஷன் சிந்தூர் 

காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து  ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை நேற்று அதிகாலை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சமூக வலைதளத்தில் பலர் தாக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஹைதராபாதில் பல வருடங்களாக இயங்கி வரும் பிரபல கராச்சி பேக்கரியின் பெயரை மாற்றச் சொல்லி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

Continues below advertisement

கராச்சி பேக்கரியை பெயர்மாற்ற போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் தலை நகரமாக இருந்து வருகிறது கராச்சி. இந்தியாவில் கராச்சி பேக்கரி பல நகரங்களில் பிரபலமாக இயங்கி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து ஹைதராபாதில் அமைந்துள்ள கராச்சி பேக்கரியை பெயர்மாற்றச் சொல்லியும் அந்த பேக்கரியில் தேசிய கொடியின் மூவர்ணத்தை பூசியும் இந்துத்துவ குழுக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். 

Continues below advertisement

 " ஹைதராபாதில் கடந்த 1953 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதிருந்து கராச்சி பேக்கரி அமைக்கப்பட்டது. கடந்த 73 ஆண்டுகளாக இந்தியாவில் இந்த பேக்கரி இயங்கி வருகிறது. எங்கள் தாத்தா பாகிஸ்தானில் இருந்து வந்ததால் கராச்சி பேக்கரி என்று பெயரிட்டார். தற்போது இந்த பெயரை மாற்றச் சொல்கிறார்கள். இந்த பெயரை மாற்றாமல் இருக்க  முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் எங்களது மற்ற கிளைகளில் மூவர்ணத்தை பூசுகிறார்கள். நாங்கள் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிராண்டு பாகிஸ்தான் இல்லை. எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்" இதுகுறித்து கராச்சி பேக்கரியின் உரிமையாளர்  கூறியுள்ளார்