மேலும் அறிய

Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?

Maragatham Kumaravel: இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், பெண்கள் கோயிலுக்கு போய் தவெக வெற்றி பெற வேண்டிவிட்டு வாக்களிக்க வருவார்கள் என மரகதம் குமரவேல் கூறினார். 

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதேபோல் கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்த நிலையில் அவர்களது வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு உள்ளது. இதனால் 5 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

1 மணி நிலவரப்படி 54 சதவீத வாக்குகள்

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் தவெக, எதிர்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகிறது. இந்நிலையில் காலை 1  மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

 மரகதம் குமரவேல் பேட்டி

இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்களித்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதைப் போல மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர் சிரித்த முகத்துடன் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களிப்பதாக தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், பெண்கள் கோயிலுக்கு போய் தவெக வெற்றி பெற வேண்டிவிட்டு வாக்களிக்க வருவார்கள் என கூறினார். 

குதிரை பேரம் எதுவும் நடக்கவில்லை

மேலும் பேசிய அவர் குதிரை பேரம் எதுவும் நடக்கவில்லை. இது போன்ற கட்டுகதைகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் விமர்சனம் செய்யவில்லை. இங்கு உள்ள மதுராந்தக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். நிச்சயமாக 100 சதவீதம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள். வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதை நிரூபித்து காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளார். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
DMK: வெளிப்படையான முறையிலே கொள்முதல்; போலிப் பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டது?தவெக-விற்கு திமுக கேள்வி
DMK: வெளிப்படையான முறையிலே கொள்முதல்; போலிப் பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டது?தவெக-விற்கு திமுக கேள்வி
விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கையை எடுக்கின்றனர் - செல்லூர் ராஜூ பேட்டி !
விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கையை எடுக்கின்றனர் - செல்லூர் ராஜூ பேட்டி !
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
Embed widget