CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
CM Vijay: வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, முதலமைச்சர் விஜய்க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

CM Vijay: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி, கடந்த 15ம் தேதி முதலமைச்சர் விஜய்க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு ED கடிதம்:
ஆளுங்கட்சி எனும் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு எதிர்க்கட்சியாகியுள்ள திமுகவிற்கான முதல் பிரச்னையாக, புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு அமலாக்கத்துறையிடம் இருந்து வந்துள்ள கடிதம் மாறியுள்ளது. அதில் கடந்த 2011-16 காலகட்டத்தி ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பான புகாரில், தற்போது திமுகவின் முக்கிய நிர்வாகியாக உள்ள செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இதே கோரிக்கையை அமலாக்கத்துறை முன்வைத்த போது, அப்போதைய திமுக அரசு அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை சென்னையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும், மாநில அரசின் கட்டாய அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளதால் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.
ஒகே சொல்வாரா? - சிஎம் விஜய்
தமிழ்நாடு அரசின் தலை செயலாளருக்கு கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் 3 பக்க கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதோடு புகார் தொடர்புடைய ஆதாரங்கள், ரகசிய விசாரணைக் குறிப்பு மற்றும் வழக்குத் தரப்பு புகாரின் நகல் ஆகியவற்றை ஒரு பென் டிரைவ் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளனவாம். மேலும், செந்தில்பாலாஜி ஆளும் கட்சி மற்றும் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்ததால், முந்தைய திமுக அரசு வேண்டுமென்றே அனுமதி வழங்குவதில் தாமதம் செய்ததாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றம் முறையாக விசாரணையைத் தொடங்க ஏதுவாக, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு தவெக தலைமையிலான மாநில அரசை அமலாக்கத்துறை தற்போது வலியுறுத்தியுள்ளது. இதற்கு புதிய அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை முறைப்படி விஜய் அனுமதி அளித்தால், அடுத்து வரும் நாட்கள் திமுகவிற்கு மிகவும் சோதனையானதாக இருக்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு விவரம் என்ன?
கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், அப்போது அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியபோது இந்த ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. அதன்படி, போக்குவரத்துத் துறையில் வேலை பெற முயற்சிக்கும் நபர்களை லஞ்சம் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக வந்த புகார்களின் பேரில் சென்னை மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CCB) அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் மற்றும் மூன்று தனிப்பட்ட உதவியாளர்கள் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்தது.
2018-ல் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி, ஜூன் 2023-ல் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த பின்னர், செப்டம்பர் 26, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றார். அவர் மீண்டும் செப்டம்பர் 29 அன்று அமைச்சராக நியமிக்கப்பட்டு, மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் ஆகிய அதே துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தின் ஆட்சேபனைக்கு பிறகு செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















