மேலும் அறிய

TN Advocate General: கல்லூரி சீனியரை தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமித்த CM விஜய் - யார் இந்த விஜய் நாராயண்?

TN Advocate General Vijay Narayan: தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞராக முதலமைச்சர் விஜய் மூலம் நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் யார் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Advocate General Vijay Narayan: தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக முதலமைச்சர் விஜய் மூலம் நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயணின் பணி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய தலைமை வழக்கறிஞரை நியமித்த தமிழக அரசு

தமிழ்நாட்டின் புதிய அட்வகேட் ஜெனரல் அதாவது தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசின் தலைமை சட்ட ஆலோசகரான இவர், அரசாங்கத்திற்கு சட்ட விவகாரங்களில் ஆலோசனை வழங்குவார். உயர் நீதிமன்றங்கள்/உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசை பிரதிநிதித்துவப்படுத்துவார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் யார்? அவரது பணி அனுபவம் என்ன? என்பது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

யார் இந்த விஜய் நாராயண்?

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த பி.எஸ். ராமன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு விஜய் நாராயண நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியின் போதும் 2017ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு வரை, தலைமை வழக்கறிஞராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரண்டு வெவ்வேறு அரசுகளுக்கு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சபாநாயகர் ஜே.சி.டி, பிரபாகர்,  முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் பயின்ற அதே லயோலோ கல்லூரியில் தான், விஜய் நாராயணும் தனது இளஞகலை பட்டத்தை முடித்துள்ளார். தொடர்ந்து, 1982ம் ஆண்டு மெட்ராஸ் சட்ட கல்லூரியில் தனது சட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து மூத்த வழக்கறிஞரான ப.சிதம்பரத்தின் சேம்பரில் இணைந்து பணியை தொடங்கியுள்ளார்.

ALSO READ | TVK MLA Ravisankar : ‘டாஸ்மாக் பாரில் மதுபோதையில் துறையூர் TVK MLA?’ ரவிசங்கர் சொன்னது என்ன?

பாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்:

இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலின் மருமகனும், மூத்த வழக்கறிஞர் எம்.கே. நம்பபியாரின் பேரனுமான விஜய் நாராயணை, கடந்த 2004ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது. வரலாற்றாசிரியரும் பத்திரிகையாளருமான சர்தார் கே.எம். பணிக்கர் அவரது தாய்வழி தாத்தா ஆவார். விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொழிலாளர் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் வணிகச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பன்முகத் தன்மை கொண்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் ஆவார்.


TN Advocate General: கல்லூரி சீனியரை தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமித்த CM விஜய் - யார் இந்த விஜய் நாராயண்?

விஜய் நாராயண் - பணி அனுபவங்கள்:

விஜய் நாராயண் பல்வேறு விதமான வழக்குகளுக்காக ஆஜராகி நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். அதில்சேவைச் சட்டம், தொழிலாளர் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் வணிகச் சட்டம் ஆகியவவை பிரதானமானதாகும்.  அவர் உச்ச நீதிமன்றத்திலும், மேலும் பல உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகளை நடத்தியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் நியமனத்தை தொடர்ந்து விஜய் நாராயணும் தனது போர்ச்சுகல் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, புதன்கிழமை அன்று நாட்டிற்குத் திரும்பி அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

விஜய் வழக்கில் ஆஜரான நாராயண்

இதனிடையே, ரோல்ஸ்-ராய்ஸ் நுழைவு வரி விலக்கு கோரியது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்காக ஜூலை 2021 மற்றும் மீண்டும் அக்டோபர் 2021 -ல் விஜய் நாராயண் வாதிட்டார் . னி நீதிபதியால் கூறப்பட்ட "தேசவிரோத" மற்றும் "திரை நாயகன்" போன்ற கருத்துக்களை நீக்க அவர் வாதிட்டதன் விளைவாக, ஜூலை 2021-ல் அந்தக் கருத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஜனவரி 2022-ல் அவை முற்றிலுமாக நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலமாக கிடைத்த நம்பகத்தன்மையையும், விஜய் நாராயணுக்கு இந்த முக்கியப் பதவியை வழங்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
அந்த பக்கமா? இந்த பக்கமா ? 11ஆம் தேதி காலை அறிவிக்கும் லாரன்ஸ்..!
அந்த பக்கமா? இந்த பக்கமா ? 11ஆம் தேதி காலை அறிவிக்கும் லாரன்ஸ்..!
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Ultraviolette F77: அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
Embed widget