Rekha Gupta: டெல்லி முதலமைச்சராகும் ரேகா குப்தா: யார் இவர்?.. 26 வருடங்களுக்கு பிறகு.!

Delhi CM Rekha Gupta: டெல்லி முதலமைச்சராக 26 ஆண்டுகளுக்கு பிறகு, பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா பதவியேற்கவுள்ளார். வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை..

Continues below advertisement

டெல்லியில் நாளை முதலமைச்சர் பதவியேற்ப விழா நடைபெறும் நிலையில், யார் என்ற ரகசியத்தை வெளியிடாமல் இருந்த பாஜக, தற்போது வெளியிட்டுள்ளது. அவர்தான் ரேகா குப்தா. யார் இவர்?, என்ன பதவிகளில் வகித்து வந்தார், என்பது குறித்து பார்ப்போம். 

Continues below advertisement

  • டெல்லி மாநிலத்தில் முதலமைச்சராகவுள்ள ரேகா குப்தா ( 50 வயது ) , ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர்
  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினரான ரேகா குப்தா, 1992-ம் ஆண்டு ஏபிவிபி மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

  • அவர் 1996-97 காலத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

  • அவர் டெல்லி பாஜக யுவ மோர்ச்சாவின் செயலாளராகவும் (2003-2004), பின்னர் தேசிய செயலாளராக (2004-2006) பணியாற்றியிருக்கிறார்.

  • ரேகா குப்தா 2013 முதல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டாலும், 2025  தேர்தலில்தான் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பந்தனா குமாரி 2020 தேர்தலில் ரேகா குப்தாவை 3,440 வாக்குகளிலும், 2015 தேர்தலில் 10,978 வாக்குகளிலும் தோற்கடித்தார். தற்போது, 2025 தேர்தலில் ரேகா குப்தா 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பந்தனா குமாரியை தோற்கடித்தார்.
  • 2013 இல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, குப்தா பிஜேபியின் தேசிய செயற்குழுவில் மார்ச் 2010 முதல் உறுப்பினராக இருந்தார். அவர் 2007 மற்றும் 2012 இல் வடக்கு பிடம்புரா (வார்டு 54) கவுன்சிலராகவும் பணியாற்றினார்.
  • நாளை ( பிப். 20 ) முதலமைச்சராக பதவியேற்றபின், பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரே பெண் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Also Read: டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், நாளை ( பிப்.20 )  வியாழக்கிழமை மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்கிறார். இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 25,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 15க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் தீவிர கண்காணிப்பில் இருப்பர் என்றும் பதவியேற்பு விழாவையொட்டி ராம்லீலா மைதானத்தை சுற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

Continues below advertisement