நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் தொடர்பான திமுக போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும் த்ரிஷா பற்றியும் அவதூறாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரில் இன்று அவரை கைது செய்திருக்கிறது காவல்துறை.
சட்டத்தின் படி வந்திருக்கிறோம் – உதயநிதி வீட்டிற்கு சென்ற விஜயகுமார் ஐபிஎஸ்
முன்னாள் துணை முதல்வர், திமுகவின் இளைஞரணி செயலாளர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரிய அந்தஸ்தில் இருக்கும் உதயநிதியை கைது செய்ய முதல்வர் விஜய் தேர்வு செய்த அதிகாரிதான் விஜயகுமார் ஐபிஎஸ். சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையராக இருக்கும் விஜயகுமார்தான், நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, ஏ.வ.வேலு என்ற ஜாம்பவன்களெல்லாம் அவருடன் வாக்குவாதம் செய்தபோதும் ‘சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ய வந்திருக்கிறோம்’ என்று துணிச்சலாக பேசி, உதயநிதியை கைது செய்திருக்கிறார் விஜயகுமார் ஐபிஎஸ்.
நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி
DIG அந்தஸ்தில் இருக்கும் விஜயகுமார் ஐபிஎஸ், நேர்மைக்கு பேர் போன அதிகாரி, அதே நேரத்தில் மனிதாபிமானம் கொண்டவராகவும், மக்களின் பாதுகாவலனாக மட்டுமே காவல்துறையினர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராகவும் அறியப்படுபவர். அவர் பணியாற்றிய இடங்களெல்லாம் தனக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினருக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் செய்தது, சக காவல்துறையினர் மத்தியிலேயே பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
காவலர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி
குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக அவர் பணியாற்றியபோது சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு ’வாரத்தின் சிறந்த காவலர்’ என்ற பட்டத்துடன் ஊக்கத் தொகை கொடுத்து உற்சாகப்படுத்தியது, கொரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என விஜயகுமாரின் பணிகள் ஏராளம். அதே நேரத்தில் சட்ட ஒழுங்கை பேணிக் காப்பதிலும் குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதிலும் கறாரான கண்டிப்புக்கு பேர் போனவர் விஜயகுமார் ஐபிஎஸ்.
முக்கிய வழக்குகளை கையாண்ட விஜயகுமார்
நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர் பணியாற்றியபோது முக்கிய குற்றவழக்குகளில் விரைவாக துப்புத்துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் விரைவாக குற்றவாளிகளை கைது செய்து நகைகளையும் மீட்டது அவரது பணியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
அரசியல்வாதிகளுக்கு அஞ்சாத துணிச்சல்
அதே நேரத்தில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் அதிகாரியாக இருக்கும் விஜயகுமார் எந்த ஆட்சி காலத்திலும் அரசியல் அழுத்தத்திற்கு பணியாமல், குற்றம் குற்றமே என்பதன் அடிப்படையில் செயல்படுபவராக இருந்திருக்கிறார். குறிப்பாக, பெண்களின் கண்ணியத்தை காக்கும் பண்பு உள்ளவராக அறியப்படும் விஜயகுமாரைதான், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதியப்பட்ட உதயநிதியை கைது செய்ய அனுப்பியிருக்கிறார் முதல்வர் விஜய்.
