TVK cabinet : விஜய் அமைச்சரவையில் இடம்பிடிக்க போட்டி போடும் அதிமுக எம்எல்ஏக்கள்.! யார் யார் தெரியுமா.?
TVK cabinet ADMK MLA : தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், 2 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. அந்த வகையில் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தவெகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை இழந்த திமுக- 3வது இடத்தில் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுகவிற்கு இடையேதான் போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அடுத்த இடத்தில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உதவியோடு ஆட்சியை பிடித்தது தவெக. எதிர்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக இழந்த 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அதிமுகவில் உட்கட்சி மோதல் தலைதூக்கியுள்ளது.
மீண்டும் உடையும் அதிமுக
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக, 2021ஆம் ஆண்டு திமுகவிடம் ஆட்சியை இழந்தது. இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்து அதிமுக, அப்போது கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள், மோதல்கள் ஏற்பட்டது. இதனால் பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. தற்போது அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுள்ள நிலையில், அடுத்தாக என்ன நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணி உருவாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சிவி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் போட்டி போட்டு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.
தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த சிவி சண்முகம் அணி
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இரு பிரிவாக அதிமுகவினர் பிரிந்துள்ளது வெட்ட வெளிச்சமானது. எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்க கோரி ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து மற்றொரு அணியும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் சட்டமன்றத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. அடுத்தாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தனர்.
அமைச்சரவையில் இடம்பெற போகும் அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரவையிலும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே 6 முதல் 7 அமைச்சர்கள் அதிமுகவிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,நத்தம் விஸ்வநாதன், காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர்களின் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தினம் தவெக தங்கள் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அப்போது பெரும்பான்மையை நிரூபித்த பிறகு 34 அமைச்சர்களின் பட்டியலானது வெளியாகும் என கூறப்படுகிறது. அதில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என தகவல் கூறப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















