VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான நிலையில் அது மறுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். வி.எஸ்.பாபு ஒரே சைகை மூலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஸ்டாலினை வீழ்த்தியதால் வி.எஸ்.பாபுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு மாதமாக நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றார்.
30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு
இந்நிலையில் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த 9ம் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் வி.எஸ்.பாபுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.
இதையும் படிங்க: Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
நேரில் நலம் விசாரித்த முதல்வர்
அவரது உடல்நிலை குறித்து அமைச்சர்கள் நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரித்து வந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வெளியாகின.
டிரக்கியாஸ் சிகிச்சை
ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைகள் வெளியாகததால் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது வி.எஸ்.பாபுக்கு வாய் அல்லது மூக்கு வழியாக மூச்சுவிட சிரமமாக இருப்பதால் கழுத்தின் முன்பகுதியில் துளையிட்டு குழாய் மூலம் நேரடியாக நுரையீரலுக்கு காற்றைச் செலுத்தும் டிரக்கியாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில் அதுபோன்று எந்த கருவியும் பொருத்தப்படவில்லை என இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாப்பிட முடியுமா?
டிரக்கியாஸ்டமி செய்துவிட்டதால் சாப்பிடவே முடியாது என்று அர்த்தமில்லை. நோயாளியால் பாதுகாப்பாக விழுங்க முடியுமா என்பதை மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். அதன் பிறகே வாய் வழியாக உணவு கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்























